இளையவேணிகிருஷ்ணா

இளையவேணிகிருஷ்ணா

நான் ஒரு இணைய வானொலி அறிவிப்பாளர் மற்றும் கலைகளின் ரசனையோடு வாழ்க்கை வாழ விரும்புபவர்.

  • Latest
  • Popular
  • Video

White புதிதாக வாங்கிய சட்டை என்றேனும் நைந்து தான் போகும்! அப்படி நைந்து போகும் போது புது சட்டையை வாங்குவதற்கு இயல்பான ஆசை இருக்கும்... அப்படி தான் இந்த நைந்து போன உடலில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒரு கருவறையில் புகுந்து புத்தம் புது சட்டையாக வெளியே வருகிறோம்... மீண்டும் ஆசையை வளர்த்து பிறந்து இறந்து பிறந்து இறந்து..... தொடர் கதையாக... அந்த ஆசை உங்களுக்கு இருக்கும் வரை இந்த பிறப்பு இறப்பு சூழலில் இருந்து விடுபட முடியாது! #இரவு சிந்தனை ✨ ஆத்ம விசாரம் 🍁 #இளையவேணிகிருஷ்ணா. நாள் 02/06/24. ஞாயிற்றுக்கிழமை. முன்னிரவு பொழுது 11:25. ©இளையவேணிகிருஷ்ணா

#இளையவேணிகிருஷ்ணா #எண்ணங்கள் #இரவு #flowers  White புதிதாக வாங்கிய சட்டை 
என்றேனும் நைந்து தான் போகும்!
அப்படி நைந்து போகும் போது 
புது சட்டையை வாங்குவதற்கு 
இயல்பான ஆசை இருக்கும்...
அப்படி தான் இந்த நைந்து போன 
உடலில் இருந்து 
விடுபட்டு மீண்டும் ஒரு கருவறையில் 
புகுந்து புத்தம் புது சட்டையாக 
வெளியே வருகிறோம்...
மீண்டும் ஆசையை வளர்த்து 
பிறந்து இறந்து பிறந்து இறந்து.....
தொடர் கதையாக...
அந்த ஆசை உங்களுக்கு 
இருக்கும் வரை 
இந்த பிறப்பு இறப்பு சூழலில் இருந்து 
விடுபட முடியாது!
#இரவு சிந்தனை ✨ 
ஆத்ம விசாரம் 🍁 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 02/06/24.
ஞாயிற்றுக்கிழமை.
முன்னிரவு பொழுது 11:25.

©இளையவேணிகிருஷ்ணா

#flowers

14 Love

White நான் சொல்வதை கேட்கும் இடத்தில் ஒரு ஓநாய் இருக்கிறது! தந்திரங்கள் நிறைந்த ஓநாயின் மனதை எப்படியோ நான் ஆக்கிரமித்து விட்டேன்... இன்னும் ஒரு சில நொடிகளில் நான் அதற்கு சில கட்டளைகள் இட்டு பயணிக்க வேண்டும்... ஆனால் அதற்கு மேல் அதற்கு கட்டளை இட மனமில்லாமல் நகர்வதை பார்த்து அந்த ஓநாய் ஏதோவொன்று உந்தி தள்ள என் முன் வந்து மண்டியிடுகிறது... நான் அதன் தலையை ஆதரவாக கோதி விட்டு எந்த கட்டளையும் பிறப்பிக்காமல் கடந்து செல்கிறேன்! என் இயல்பை மீறிய செயலை நான் செய்கிறேன் என்று அங்கே பலர் ஆச்சரியபப்படும் போது அந்த ஓநாயின் பேரன்பு கொண்ட இயல்பு ஒரு மாய திரையால் மறைக்கப்படுவதை பார்த்து சில கண்ணீர் துளிகள் கசிந்து அந்த ஓநாயின் உடல் சிலிர்க்கிறது! இது ஒரு மாய உலகம் என்று! #இளையவேணிகிருஷ்ணா. வியாழன்/30/05/24/முன்னிரவு 7:50. ©இளையவேணிகிருஷ்ணா

#இளையவேணிகிருஷ்ணா #தத்துவம் #கவிதை #Animals  White நான் சொல்வதை கேட்கும் இடத்தில் 
ஒரு ஓநாய் இருக்கிறது!
தந்திரங்கள் நிறைந்த ஓநாயின் 
மனதை எப்படியோ நான் ஆக்கிரமித்து 
விட்டேன்...
இன்னும் ஒரு சில நொடிகளில் 
நான் அதற்கு சில கட்டளைகள் இட்டு 
பயணிக்க வேண்டும்...
ஆனால் அதற்கு மேல் அதற்கு 
கட்டளை இட மனமில்லாமல் 
நகர்வதை பார்த்து 
அந்த ஓநாய் ஏதோவொன்று உந்தி தள்ள 
என் முன் வந்து மண்டியிடுகிறது...
நான் அதன் தலையை ஆதரவாக கோதி விட்டு 
எந்த கட்டளையும் பிறப்பிக்காமல் 
கடந்து செல்கிறேன்!
என் இயல்பை மீறிய செயலை 
நான் செய்கிறேன் என்று 
அங்கே பலர் ஆச்சரியபப்படும் போது 
அந்த ஓநாயின் பேரன்பு கொண்ட இயல்பு 
ஒரு மாய திரையால் மறைக்கப்படுவதை பார்த்து 
சில கண்ணீர் துளிகள் 
கசிந்து அந்த ஓநாயின் உடல் சிலிர்க்கிறது!
இது ஒரு மாய உலகம் என்று!
#இளையவேணிகிருஷ்ணா.
வியாழன்/30/05/24/முன்னிரவு 7:50.

©இளையவேணிகிருஷ்ணா

White சபிக்கப்பட்ட நாட்களோடு பயணிப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல! சாபங்கள் ஏதோவொரு வகையில் ஆறுதல் தருகிறது என்று எண்ணிக் கொண்டே பயணிக்கிறேன்! சில சூட்சமங்கள், உண்மைகள் முகமூடி கிழித்து உணர்த்தி விடுவதும் சாபங்கள்... இன்னும் நிறைய சாபங்கள் எதிர்பார்க்கிறேன் நான்... இன்னும் பல கர்மாக்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ள சாபங்களே தோணி என்று தீவிரமாக நம்பும் நான் சபிக்கப்பட்ட நாட்களில் பேரமைதியோடு பயணிக்கிறேன்! இளைய வேணி கிருஷ்ணா. நாள் 30/05/24. வியாழக்கிழமை. முன்னிரவு 7:30. ©இளையவேணிகிருஷ்ணா

#இரவுகவிதை #கவிதை #sad_shayari  White சபிக்கப்பட்ட நாட்களோடு
பயணிப்பது எனக்கு ஒன்றும் 
புதிதல்ல!
சாபங்கள் ஏதோவொரு வகையில் 
ஆறுதல் தருகிறது என்று 
எண்ணிக் கொண்டே 
பயணிக்கிறேன்!
சில சூட்சமங்கள், உண்மைகள் 
முகமூடி கிழித்து உணர்த்தி விடுவதும் 
சாபங்கள்...
இன்னும் நிறைய சாபங்கள் 
எதிர்பார்க்கிறேன் நான்...
இன்னும் பல கர்மாக்களின் பிடியில் இருந்து 
விடுவித்துக் கொள்ள 
சாபங்களே தோணி என்று 
தீவிரமாக நம்பும் நான் 
சபிக்கப்பட்ட நாட்களில் 
பேரமைதியோடு பயணிக்கிறேன்!
இளைய வேணி கிருஷ்ணா.
நாள் 30/05/24.
வியாழக்கிழமை.
முன்னிரவு 7:30.

©இளையவேணிகிருஷ்ணா

White எனது இறப்பிற்கு உங்களிடம் இருந்து ஆழ்ந்த இரங்கலை நான் எப்போதும் எதிர்பார்ப்பது இல்லை... நான் தீயில் வேகும் போது அங்கே அகங்காரம் கொண்டு நகைக்காமல் இருங்கள் அது போதும் எனக்கு... உங்கள் நகைப்பு எனது வாழ்வை பற்றியது என்றால் இங்கே என்னை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கும் தீயின் சூட்சம பாடம் உங்கள் காதுகளில் விழாத அளவுக்கு அஞ்ஞானிகளாகவே விடை பெறுகிறீர்கள் நான் எரிந்துக் கொண்டு இருக்கும் சுடுகாட்டில் இருந்து... #ஆத்ம விசார கவிதை 🍁. #இளையவேணிகிருஷ்ணா. நாள் 21/05/24. செவ்வாய் கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா

#இளையவேணிகிருஷ்ணா #கவிதை #ஆத்ம #Sad_shayri  White எனது இறப்பிற்கு 
உங்களிடம் இருந்து 
ஆழ்ந்த இரங்கலை நான் எப்போதும் 
எதிர்பார்ப்பது இல்லை...
நான் தீயில் வேகும் போது 
அங்கே அகங்காரம் கொண்டு 
நகைக்காமல் இருங்கள் 
அது போதும் எனக்கு...
உங்கள் நகைப்பு எனது வாழ்வை 
பற்றியது என்றால் 
இங்கே என்னை கொஞ்சம் கொஞ்சமாக 
உள்வாங்கும் தீயின் சூட்சம பாடம் 
உங்கள் காதுகளில் விழாத அளவுக்கு 
அஞ்ஞானிகளாகவே
விடை பெறுகிறீர்கள் 
நான் எரிந்துக் கொண்டு இருக்கும் 
சுடுகாட்டில் இருந்து...
#ஆத்ம விசார கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/05/24.
செவ்வாய் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா

#Sad_shayri #ஆத்ம விசாரம்

0 Love

White ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் இருந்தாலும் என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில் உங்களை மறந்து உறங்கி இருக்கிறீர்களா? அவள் நிரந்தரமானவள்... என்றும் நமது கவலைகளுக்கு கண்ணீருக்கு சூட்சும ஸ்பரிசத்தில் ஆறுதல் சொல்லி நிச்சலனமான பேரமைதியோடு உறக்கத்தை தருபவள்! #இரவு கவிதை 🍁 முன்னிரவு பொழுது 10:00. நாள்:12/05/24. ஞாயிற்றுக்கிழமை. இளைய வேணி கிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா

#கவிதை #இரவு #mothers_day  White ஒவ்வொருவருக்கும் ஒரு தாய்
இருந்தாலும் 
என்றேனும் பூமிதாயின் ஸ்பரிசத்தில்
உங்களை மறந்து உறங்கி இருக்கிறீர்களா?
அவள் நிரந்தரமானவள்...
என்றும் நமது கவலைகளுக்கு 
கண்ணீருக்கு 
சூட்சும ஸ்பரிசத்தில் ஆறுதல் சொல்லி
நிச்சலனமான பேரமைதியோடு
உறக்கத்தை தருபவள்!
#இரவு கவிதை 🍁
முன்னிரவு பொழுது 10:00.
நாள்:12/05/24.
ஞாயிற்றுக்கிழமை.
இளைய வேணி கிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா

#mothers_day

12 Love

White எத்தனையோ நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் பிறையை தேடி அலையும் கண்களை போல... அத்தனை சலசலப்பான உலகத்திலும் பேரமைதியை தேடி அலையும் என் மனதின் நிச்சலனமான பயணத்தை எண்ணி வியக்கிறேன் இங்கே... இந்த இரவோ என்னோடு கொஞ்சம் உரையாடக் கூடாதா உன் மனம் வரும் வரை என்று கெஞ்சுகிறது... ஒரு தேடலும் ஊடலும் இங்கே கலந்து என்னை திணறடிக்கிறது இளம் தென்றல் என் நிலையை பார்த்து மெலிதாக தென்றல் எனும் இசையை கொண்டு தாலாட்ட நான் சற்றே கண் அயருகிறேன்... #இரவு கவிதை 🍁. நாள் 08/05/24. புதன்கிழமை. #முன்னிரவுப் பொழுது 10:15. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா

 White எத்தனையோ நட்சத்திர கூட்டங்களுக்கு
நடுவில் பிறையை தேடி அலையும்
 கண்களை போல...
அத்தனை சலசலப்பான உலகத்திலும்
பேரமைதியை தேடி அலையும்
என் மனதின் நிச்சலனமான
பயணத்தை எண்ணி
வியக்கிறேன் இங்கே...
இந்த இரவோ என்னோடு
கொஞ்சம் உரையாடக் கூடாதா
உன் மனம் வரும் வரை என்று
கெஞ்சுகிறது...
ஒரு தேடலும் ஊடலும்
இங்கே கலந்து என்னை திணறடிக்கிறது
இளம் தென்றல் என் நிலையை 
பார்த்து மெலிதாக தென்றல் எனும்
இசையை கொண்டு தாலாட்ட
நான் சற்றே கண் அயருகிறேன்...
#இரவு கவிதை 🍁.
நாள் 08/05/24.
புதன்கிழமை.
#முன்னிரவுப் பொழுது 10:15.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா

#Sad_Status #இரவு #கவிதை 🍁

13 Love

Trending Topic